முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்கட் அவுட்' விவகாரம் - தீப்தி சர்மாவுக்கு ஆதரவளித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      விளையாட்டு
Deepti-Sharma 2022--09-25

Source: provided

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.4 ஒவர்களில் 153 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 

இதனால் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தின் 43-வது ஓவரில், இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீன், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவால் மன்கட் முறையில் அவுட் செய்யப்பட்டது தற்போது பேசுப்பொருளாகியுள்ளது. ஐ.சி.சி.யின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி, மன்கட் முறையில் அவுட் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து வீரர்கள் பலர் இதனை விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து சாம் பில்லிங்க்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், "இது விளையாட்டின் மாண்பை குறைக்கும் செயலாக தெரியவில்லையா?" என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மற்றொரு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், "பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்து விடுபடும் வரை, எதிர்முனையில் இருக்கும் பேட்டர் க்ரீசுக்கு உள்ளே இருப்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லையே" என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து