முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரை, கன்னியாகுமரியில் பெட்ரோல் குண்டுவீச்சு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
Petrol-bomb 2022--09-23

Source: provided

மதுரை : கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரை,கன்னியாகுமரியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கோவை சித்தாபுதூரில் உள்ள மாநகர பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிக்கவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து கோவையின் பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மதுரையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன். இவர் கம்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழில் செய்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அனுப்பானடி மண்டல் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் 2 பேர் கொண்ட கும்பல் டூ வீலரில் வந்து 3 பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டில் வீசியதில் சரக்கு வாகத்தின் மேல் விழுந்து ஒன்றும். மற்றென்று வெளியே விழுந்து வெடித்தது. இதில் வெடிக்காக மற்றொரு பெட்ரோல் குண்டு ஒன்று கார்ஷெட்டின் உள்ளே விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருகே கருமங்கூடல் பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் கல்யாண சுந்தரம். இவருடைய வீட்டில் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள், பெட்ரோல் குண்டுகளை வீட்டுக்குள் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகளை மண்டைக்காடு காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து