முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடர்: முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்ப்பு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      விளையாட்டு
Umran-Malik 2022 12 03

Source: provided

மிர்பூர் : இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. 

நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.

நியூசிலாந்து தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியது. 

இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடனும் , திறமையுடனும் விளையாட வேண்டும்.

இந்நிலையில், வேகப்பந்து வீரர் முகமது ஷமி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில், காயம் அடைந்த முகமது ஷமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சு புயல் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து