முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 நாள் தடை

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Sathuragiri 20221 02 02

Source: provided

விருதுநகர்: சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சதுரகிரி மலை கோவிலுக்கு இன்றும், நாளையும் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து