முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 1,000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,134 பேருக்கு தொற்று

புதன்கிழமை, 22 மார்ச் 2023      இந்தியா
India Corona 2022 12-06

இந்தியாவில் 1,000-ஐ கடந்து தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 1,134 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீப நாட்களாக மீண்டும் அதிகரித்து கடந்த 19-ந்தேதி ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரே நாளில் 1,071 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. ஆனால் மறுநாள் 918 ஆகவும், நேற்று 646 ஆகவும் பாதிப்பு குறைந்த நிலையில் நேற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 280 பேர், குஜராத்தில் 176 பேர், கேரளா மற்றும் கர்நாடகத்தில் தலா 113 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 662 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 279 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்று முன்தினத்தை விட 467 உயர்ந்துள்ளது. அதாவது நேற்று காலை நிலவரப்படி 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், சத்தீஷ்கரில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 1-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து