முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில் 2 முறை விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Coromandel-1 2023-06-03

Source: provided

பாலசோர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில், 2 முறை விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது. 

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் ஒடிசாவில் ஒரு வெள்ளி கிழமை இரவில், இதே போன்றதொரு விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்கியது. 2009-ம் ஆண்டு, பிப்ரவரி 13-ம் தேதி ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் இரவில், அதிவிரைவாக சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளம் மாறி சென்ற போது, தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. 

இதில், 13 பெட்டிகள் தடம் புரண்டன. அவற்றில் 11 பெட்டிகள் படுக்கை வசதி கொண்டவை. 2 பொது பெட்டிகளும் அடங்கும். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 161 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஒடிசாவின் ஜஜ்பூர் சாலை ரயில்வே நிலையத்தை கடந்து, அதிவேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது, வேறு தண்டவாளத்தில் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில், ரயிலின் என்ஜின் வேறு தண்டவாளத்தில் சென்ற போது, பெட்டிகள் தனியாக கழன்று ஓடின. அவை, ரயிலில் இருந்து தொடர்பற்று பிரிந்து விபத்தில் சிக்கின. பெட்டி மீது மற்றொரு பெட்டி ஏறி காட்சியளித்தது. அதுவும் இரவு 7.30 மணியளவில் விபத்து நடந்திருந்தது. 

இந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி, வெள்ளி கிழமை இரவில் ஒடிசாவில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றொரு விபத்தில் சிக்கி உள்ளது. 

2 முறையும் ஒடிசாவில், இரவு நேரத்தில், வெள்ளி கிழமையில் என பல விஷயங்களில் ஒத்துப்போகும் வகையில் விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கி உள்ளது. இரண்டு முறையும், ரயில் விரைவாகவும், தண்டவாளம் மாறி சென்ற போது விபத்தில் சிக்கி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து