முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வின் மனைவி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      விளையாட்டு
Ashwin 1

Source: provided

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டத்தில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் 500 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைத்தார். 37 வயதான அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார். இந்நிலையில், 500-க்கும், 501-வது விக்கெட்டுக்கும் இடையே அஸ்வினுக்கு நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

அதில் அவர் கூறியுள்ளதாவது: ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வினின் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பை பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக நடந்தது. 500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் நீண்ட நெடிய 48 மணி நேரமாகும். 500 விக்கெட் வீழ்த்தியது அபாரமான சாதனையாகும். உங்களை (அஸ்வின்) நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

_______________________________________

இங்கிலாந்து வீரர்களுக்கு அட்வைஸ் 

ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது. 'பாஸ்பால்' என்ற அதிரடியான பேட்டிங் அணுகுமுறைக்கு பிறகு இங்கிலாந்து சந்தித்த மிக மோசமான தோல்வி இதுதான். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூட்டணி பெற்ற மோசமான தோல்வி இதுதான். இந்த தோல்வி அவர்களின் 'பாஸ்பால்' யுக்தியின் விளைவை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் எல்லா நேரமும் ஆக்ரோஷமாக விளையாட முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது அதிரடியாக விளையாடலாம். 'பாஸ்பால்' என்பது தாக்குதல் ஆட்டத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. ஆனால் இங்கு நெருக்கடியை திறம்பட கையாள்வதும் முக்கியம். 

3-வது நாளில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் விளையாடிய விதத்தை பாருங்கள். 30 அல்லது 40 பந்துகள் எதிர்கொண்டு அழுத்தத்தை தணித்ததும் பந்தை பவுண்டரிக்கு விளாச ஆரம்பித்தனர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட். இந்தியா மொத்தம் 228.5 ஓவர்களில் 875 ரன்கள் குவித்தது. இங்கு இந்தியாவின் பேட்டிங் சலிப்பை ஏற்படுத்தியது என்று யாரும் சொல்லமாட்டார்கள். இந்திய மண்ணில் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்வது என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் ஆலோசிக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்த விதம், குறிப்பாக ஜோ ரூட் தவறான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்தபோது எனது கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை' என்றார்.

_______________________________________

ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது.  இந்த நிலையில் இந்த போட்டிக்கு இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா (24) தகுதி பெற்றுள்ளார்.  இது தொடர்பாக பேசிய அவர் “ஒலிம்பிக்கில் விளையாடுவது என் வாழ்நாள் கனவாக இருந்தது. தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  

இறுதி ஒத்திகை பயிற்சியில் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை பொருத்து ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று இத்திய குதிரையேற்ற அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதனைத் தொடர்ந்து போலந்து, நெதர்லாந்து, ஜெர்மணி மற்றும் பெல்ஜியமில் ஒத்திகை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை, பெற்றதன் பேரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுஷ் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார்.  மேலும், இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில்,  இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

_______________________________________

டி20 தொடரில் நேபாள அணி

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நேபாள அணி இந்தியாவின் குஜராத் மற்றும் பரோடா அணிகளுக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் ஆட உள்ளது. 'நட்புக் கோப்பை' என அழைக்கப்படும் இந்த தொடர் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து