முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரணம் விமர்சனம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      சினிமா
Ranam-review 2023-02-26

Source: provided

சிதைந்த நிலையில் கிடைக்கும் உடலை வைத்து, அவர் யார்? என்பதை வரைபடமாக வரையும் திறமை படைத்த நாயகன் வைபவ், காவல்துறையால் முடிக்க முடியாத சில வழக்குகளுக்கு குற்ற பின்னணி கதையை எழுதி கொடுக்கும் பணியையும் செய்து வருகிறார். இதற்கிடையே, சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் அட்டை பெட்டிகளில் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் கிடைக்கிறது. இறந்தவர் யார்? என்று தெரியாமல் திணறும் காவல்துறைக்கு வைபவ் உதவி செய்கிறார்.

திடீரென்று வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைபவை இந்த வழக்கிற்குள் வர வேண்டாம் என்று சொல்ல, மறு தினமே அவர் மாயமாகி விடுகிறார். இதையடுத்து, புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் வழக்கு விசாரணையை கையில் எடுக்க, அவருக்கும் வைபவ் பல உதவிகளை செய்வதோடு, இந்த மர்ம கொலைக்கான பின்னணியையும், கொலையாளியையும் கண்டுபிடித்து விடுகிறார். அவர் எப்படி கண்டுபிடித்தார்?, அந்த கொலையாளி யார்?, எதற்காக கொலை செய்கிறார்?, வைபவுக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கான விடையை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘ரணம்’.

படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் திரைக்கதை நகர்வதோடு, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கும், குற்றத்திற்கும் ஏதோ பின்னணி இருக்கிறது, என்பது போல் காட்சிகளை வடிவமைத்து நம்மை யூகிக்க வைக்கும் இயக்குநர் ஷெரிஃப், அடுத்தடுத்த காட்சிகளில் வைத்திருக்கும் திருப்பங்கள் மூலம் நம் யூகங்களை உடைத்துவிடுகிறார்.

மொத்தத்தில், இந்த ‘ரணம்’ நிச்சயம் ரசிகர்களின் மனதை தொடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து