முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

திருவனந்தபுரம் : பா.ஜ.க. கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.கேரள மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது

இதுகுறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது., கேரளா வருவதே எப்பொழுதும் எனக்கும் மகிழ்ச்சிதான். கேரள மக்களிடம் எனக்கு மிகுந்த அன்பு இருக்கிறது. கேரள மக்கள் எனக்கு கொடுக்கும் அன்பைத் திருப்பி அளிப்பதற்கு கடினமாக முயற்சி செய்து வருகிறேன். வரும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதே பா.ஜ.க. தலைமையிலான என்டிஏ கூட்டணியின் முழக்கம்.

கேரள மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் புறக்கணிக்காது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு இணையாக கேரளா மாநில அரசு உள்ளது. பா.ஜ.க. எந்தவொரு மாநிலத்தையும் வாக்கு வங்கி கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. கேரளாவில் பா.ஜ.க. கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருகிறோம்.

2024-ல் பா.ஜ.க. ஆட்சி அமைப்பது உறுதி, இதை எதிர்க்கட்சிகளே ஏற்றுக் கொண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் என்னை பற்றி அவதூறு பரப்புவதுதான். காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் நலனை விட அவர்களது குடும்பத்தின் நலன் மேலானது. தேசத்தைக் கட்டியெழுப்ப பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கேரள மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை நான் அறிவேன். பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து