முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோயை குணப்படுத்த மலிவு விலையில் மாத்திரை: டாடா இன்ஸ்டிடியூட் சாதனை

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      இந்தியா
Cancer

மும்பை, 2-வது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில், ரூ.100 விலையில் மாத்திரையை, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்து உள்ளது.

இந்த ஆராய்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த, நிறுவனம் தற்போது வெற்றி கண்டுள்ளது. இந்த மாத்திரை நோயாளிகளுக்கு இரண்டாவது முறை புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் எனவும், கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் எனவும் டாடா நிறுவனம் தெரிவித்து உள்ளது. கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றிலும் இந்த மாத்திரை பயன் உள்ளதாக இருக்கும்.

இந்த மாத்திரை, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் ஒப்புதலுக்கு பிறகு விற்பனைக்கு வரும். மாத்திரை தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த இந்த மாத்திரை பெரிதும் உதவும். எல்லா மருந்துக்கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும். இது பெரிய வெற்றி''. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து