முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நாளை வரை இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் : சென்னை வானிலை மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : தமிழகத்தில் நாளை வரை இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 9 -ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் நாளை 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து