முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது

திங்கட்கிழமை, 27 மே 2024      உலகம்
Jail

Source: provided

சாண்டியாகோ : சிலி நாட்டில் 137 பேரை பலி கொண்ட காட்டுத்தீயை ஏற்படுத்திய வனத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் அமெரிக்க நாடான சிலியின் வால்பரைசோ பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயில் சிக்கி 137 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகின. சிலர் வேண்டுமென்றே இந்த தீ விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் வனத்துறை அதிகாரியான பிராங்கோ பின்டோ மற்றும் தீயணைப்பு துறையைச் சேர்ந்த ஊழியர் ஆகியோர் திட்டமிட்டு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் இருவரையும் 6 மாதம் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து