முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் சீசன் துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, 12 ஜூன் 2024      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : குற்றாலத்தில் சாரல் மழை பெய்வதுடன் குளிர்ந்த காற்றும் வீசுவதால் அங்கு சீசன் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக விழுகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தென்காசி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பொழிவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து