முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சந்திரபாபு நாயுடு தரிசனம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
Tirupati-chandrababu-naidu

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 

ஆந்திராவில் 4-வது முறையாக முதல்வராக  சந்திரபாபு நாயுடு  நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை தனது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி, பேரன் தேவன்ஷ் ஆகியோருடன் சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். 

விமான நிலையத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடுவுக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் திருப்பதி மலைக்கு சந்திரபாபு நாயுடு சென்றார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் சந்திரபாபு நாயுடு தங்கினார். இதையடுத்து நேற்று காலை வி.வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். 

சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பட்டு வஸ்திரம் மற்றும் பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர். திருப்பதி கோவிலுக்குச் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், 

மாநில மக்கள் அளித்த வெற்றியை நான் இதுவரை பார்த்ததில்லை. மாநிலத்தில் மக்கள் ஆட்சி தொடங்கியுள்ளது. இந்த மாநிலம் செழிக்க பிரார்த்தனை செய்தேன். மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும். 

இன்று முதல் நல்லாட்சி ஆரம்பமாகிறது. நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் நிறைவேற்றுவேன். 2047-க்குள் தெலுங்கு மக்கள் உலக அளவில் முதலிடத்தைப் பெறுவார்கள். ஆந்திராவை நாட்டிலேயே முதல் மாநிலமாக மாற்றுவேன். 

அரசியல் சதிகளை சகித்துக் கொள்ள மாட்டோம். குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. நல்லவர்களை பாதுகாப்போம், கெட்டவர்களை தண்டிப்போம். திருமலையில் இருந்து சுத்திகரிப்பு ஆட்சியைத் தொடங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து