முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் பயங்கரம்: பேட்டரி தொழிற்சாலை தீ விபத்தில் 16 பேர் பலி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      உலகம்
South-Korea 2024-06-24

Source: provided

சியோல் : லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

தென்கொரிய நாட்டின் ஜியோங்கி மாகாணம் ஹவாஸ்சோங் நகரில் லித்தியம் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று 67 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அந்த தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்கள் பலரும் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.

மேலும், தொழிற்சாலையில் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். சிலர் மீட்கப்பட்ட நிலையில் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வேலை செய்த 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 23 தொழிலாளர்கள் நிலை என்ன? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. அவர்களும் தீ விபத்தில் சிக்கி இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து