முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்பு வாரியத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் புதிய மசோதா? - பார்லி.யில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக்  குறைக்கும்  வகையில் புதிய மசோதாவை மத்திய  அரசு தாக்கல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரியிருந்த விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு தற்போது இந்த அதிகார குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

நாடு முழுவதும் தற்போது வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் கொண்ட  8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.  சொத்துக்கள் மீது வக்பு வாரியம் உரிமை கோருவது தற்போது எளிதான ஒன்றாக உள்ளது. 

எனவே அதைக் கட்டுப்படுத்தும் வகையில் தன்னிச்சையாக எந்த ஒரு சொத்துக்கும் வக்பு வாரியம் உரிமை கோர முடியாதபடி புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இது தவிர்த்து வக்பு வாரியத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்  உட்பட வக்பு வாரிய அதிகார வரையறையில்  40 திருத்தங்களைக் கொண்டு வர  மத்திய பா.ஜ.க. அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து