முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் 4.6 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட திட்டம்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      உலகம்
Gaza 2024-09-09

Source: provided

துபாய் : இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உணவு மற்றும் சுகாதார வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் காசா பகுதியில் உள்ள 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. அதைத்தொடந்து 150 மையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களால் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

காசா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. உலக சுகாதார அமைப்பு , யுனிசெப் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கி உள்ளது.

போலியோ தொற்றுநோய் பகுதியாக காசா கடந்த ஜுலை மாதம் அறிவிக்கப்பட்டது.தொடந்து நடைபெற்று வரும் போர் தான் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகியவை தடுப்பூசி போடுவதற்கு வசதியாக மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு இரு தரப்பையும் கேட்டுக்கொண்டன. இதை ஏற்பதாக பாலஸ்தீனிய இயக்கமான ஹமாஸ் கூறியது. அதைத்தொடர்ந்து மருத்துவப் பணியாளர்கள் செல்ல நடைபாதையைத் திறப்பதாகவும், தடுப்பூசிகளை வழங்குவதற்கு பாதுகாப்பான பகுதிகளை ஏற்படுத்துவதாகவும் இஸ்ரேல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து