முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையை சேர்ந்தவர்கள் அட்டூழியம்: செருதூர் மீனவர்களை தாக்கி வலை, கருவிகள் கொள்ளை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      தமிழகம்
Fisher-Boat

Source: provided

நாகப்பட்டினம்; நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவர்களின் வலைகளை அறுத்தும் பறித்தும் சென்ற இலங்கையைச் சேர்ந்தவர்கள் செருதூர் மீனவர்களின் வலைகளை பறித்துச் சென்றுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செருதூர் மீனவ கிராமத்திலிருந்து கடந்த 8-ம் தேதி காலை, சத்தியசீலன் (50) என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் செருதூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விஜயன் (31), ரமணன் (22), விக்னேஷ் குமார் ( 21), ரீகன் (21) ஆகிய நால்வரும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். 9-ம் தேதி இரவு ஏழு மணி அளவில் கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 15 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 ஃபைபர் படகுகளில் வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசக்கூடிய ஆறு நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி மீனவர்களின் படகில் இருந்த 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1, ஜிபிஎஸ் கருவி, சுமார் 100 லிட்டர் டீசல் மற்றும் ரேஷன் பொருட்களை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியுள்ளனர்.

இதையடுத்து நேற்று (அக்.10) காலை கரை திரும்பிய மேற்கண்ட மீனவர்கள் சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். மீனவர்களுக்கு வெளிக்காயம் எதுவும் இல்லை என்பதால் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லவில்லை. இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து