எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்திய நிலையில், இந்திய அணி 297 ரன்களை பதிவுசெய்து டி-20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.
தொடரை வென்றது...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வென்ற இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என இந்திய முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங்...
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையெயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நேற்று ஐத்ராபாத்தில் நடக்கிறது. 3வது போட்டிக்கான இந்திய அணி: சஞ்சு சாம்சன்(w), அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ்(c), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ் இடம் பிடித்துள்ளனர். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 4 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அதற்குபிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
40 பந்துகளில் சதம்...
தொடக்கத்தில் அதிரடிக்கு பிள்ளையார் சுழி போட்ட சஞ்சு சாம்சன், ரிஷாத் ஹொசைன் வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். 9 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் என ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன் வெறும் 40 பந்துகளில் தன்னுடைய முதல் டி20 சதமடித்து அசத்தினார். மறுமுனையில் சஞ்சு சாம்சனுக்கும் எனக்கும்தான் போட்டியே என்பதுபோல் வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ், 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்தார். சஞ்சு சாம்சன் 111 ரன்கள் அடித்து வெளியேற, தொடர்ந்து களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியைத்தொடர்ந்தார்.
வரலாறு படைத்தது...
14 ஓவர் முடிவில் இந்திய அணி 200 ரன்களை எட்டிய நிலையில், 300 ரன்கள் என்ற இமாலய ரன்னை இந்தியா எட்டுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் 8 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் வெளியேறினார். பின் களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் இருவரும் சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு ரன்களை எடுத்துவந்தனர். பராக் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா 47 ரன்கள் என அடித்து அசத்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 297 ரன்களை எட்டி வரலாறு படைத்தது. 297 ரன்கள் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எட்டியது இந்திய அணி. முதல் இடத்தில் 314 ரன்களுடன் நேபாள் நீடிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்தியா ஒரு கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு முதல்வர் பதிவு
26 Nov 2025சென்னை, இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்று அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
ஈரோடு மாட்டத்தில் அரசு விழா: ரூ. 605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,
-
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
26 Nov 2025சென்னை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
26 Nov 2025ஈரோடு, ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
தேசிய பால் தினத்தை முன்னிட்டு அமைச்சர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
26 Nov 2025சேலம் : தேசிய பால் நாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
-
விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை: ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
26 Nov 2025ஈரோடு, விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு 'சென்யார்' புயலால் பாதிப்பு இல்லை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
26 Nov 2025சென்னை, மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க.வில் இன்று இணைகிறார்..? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
26 Nov 2025சென்னை, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
-
அரசமைப்பு சட்டப்பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Nov 2025புதுடெல்லி : மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.
-
தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்
26 Nov 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை தமிழ் மாநில காங்கிரசில் இணைத்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை
26 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
26 Nov 2025மதுரை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகளை காக்க உறுதியேற்போம்: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
26 Nov 2025சென்னை, இந்திய அரசியலமைப்பின் மாண்பையும், அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.


