முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களுக்கு நன்றி: உலக செஸ் சாம்பியன் குகேஷ் நெகிழ்ச்சி

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2024      விளையாட்டு
Gukesh 2023-09-01

Source: provided

சிங்கப்பூர்: என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷ் தெரிவித்துள்ளார்.

சாம்பியன் பட்டம்...

இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், நேற்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்த போட்டி நேற்று பிற்பகலில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. சற்றும் எதிர்பாரா வகையில், 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.

தீவிர பயிற்சிக்கு பின்... 

வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், "போட்டிக்கு உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இரண்டு வருட தீவிர பயிற்சிக்கு பின் கிடைத்த வெற்றி இது. ஒரு இளம் செஸ் வீரனின் கனவு எதுவோ அது நிறைவேறி உள்ளது. 10 வருட பயிற்சியின் விளைவாக இந்த சாதனையை படைத்துள்ளேன். சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வரக்கூடிய நபராக இருக்க விரும்பினேன். 

தற்போது சாம்பியன்...

11 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன் பட்டம் இந்தியாவுடன் பறிக்கப்பட்டது. தற்போது உலக சாம்பியன் ஆன மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். லீடன் தோல்வி அடைந்ததற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நேசித்த நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன்" என்று அவர் கூறினார். உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெற்றி பெற்றுள்ள குகேசுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து