முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.பி.எஸ். அரசியல் வாழ்க்கை குறித்து போகப்போக தெரியும்: அமைச்சர் ரகுபதி

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Raghupathi 1

புதுக்கோட்டை, “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்கை முடிவா, ஆரம்பமா என்பது போகப்போகத்தான் தெரியும்.” என  அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மாநில அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட 4 ஆண்டு சாதனை மலரை கலெக்டர் எம்.அருணா தலைமையில் இன்று (ஆக.2) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் எஸ்.ரகுபதி கூறியவாது: தி.மு.க. அரசு எதையும் செய்யாததைப் போன்று முன்னாள் முதல்வர் பழனிசாமி விமர்சித்துப் பேசி வருகிறார். அவரால் சாதனை மலர் வெளியிட முடியாது. வேதனை மலர்தான் வெளியிட முடியும். தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துமே புதிய திட்டங்கள். இவற்றில் ஒரு திட்டதையாவது அதி.மு.க. ஆட்சியில் தொடங்கி இருந்தால்கூட உரிமை கொண்டாடலாம். அவர் எதையும் செய்யவில்லை என்பதால் உரிமை கொண்டாட முடியாது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இருப்பது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். இவர்களை தி.மு.க. கூட்டணியில் இணைப்பது குறித்து தி.மு.க. தலைவர் முடிவெடுப்பார். திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை வைக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் கருத்து குறித்து தமிழக அரசின் வழக்கறிஞர்கள் 2 நாட்களில் நீதிமன்றத்தில் பதில் அளிப்பார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் வாழ்க்கை முடிவா, ஆரம்பமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். யாருடைய அரசியல் வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்பது போகப்போக தான் தெரியுமே தவிர, உடனே தெரியாது.  கனிமவ வளத்துறையில்  தவறு செய்ய மாட்டோம். மாட்டிக்கொள்ளவும் மாட்டோம். பிற மாநில வாக்காளர்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து