முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: களமிறங்குகிறார் விராட்கோலி?

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

மும்பை : இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரன் மெஷின்... 

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின், இந்த ஆண்டில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஒருநாள் போட்டியில்...

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், ஒருநாள் வடிவிலான போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அந்த தொடரில் விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

களமிறங்குகிறார்?...

வருகிற அக்டோபரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விராட் கோலி உதவிப் பயிற்சியாளர் நயீம் அமீனுடன் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் விராட் கோலி கூறியிருப்பதாவது: நான் பயிற்சியில் ஈடுபடுவதற்கு உதவியதற்கு நன்றி. உங்களை பார்ப்பது எப்போதும் மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

சாதனை படைக்க... 

இதுவரை இந்திய அணிக்காக 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 14, 181 ரன்கள் குவித்துள்ளார். அதில் 51 சதங்கள், 74 அரைசதங்கள் அடங்கும். அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் விராட் கோலி மொத்தமாக 27, 599 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தொடர்ந்து விளையாடும் பட்சத்தில், அந்த வடிவிலான போட்டிகளில் அவர் 15,000 ரன்கள் குவித்து சாதனை படைக்க வாய்ப்பிருக்கிறது. அதேபோல, சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ஆயிரம் ரன்கள் குவித்து சாதனை படைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து