முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் பெண்களுக்கு பட்டுப்புடவையுடன் தாலிக்கு தங்கம் வழங்கப்படும் : அருப்புக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

சனிக்கிழமை, 9 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Eps 2024-12-13

Source: provided

அருப்புக்கோட்டை :  அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பு பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி உரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆற்றினார். எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது. அருப்புக்கோட்டை நகரமே குலுங்கும் அளவு மக்கள் வெள்ளம் உள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற இதுவே சாட்சி. அருப்புக்கோட்டை தொகுதி எம் ஜி ஆர் ஐ முதலமைச்சர் ஆக்கிய  தொகுதி. என பெருமையுடன் கூறினார்.

இந்த பகுதியில் விவசாயம், நெசவு அதிகமாக உள்ளது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு கட்டங்குடி பகுதியில் 200, பசுமை வீடு வழங்கப்பட்டது. கைத்தறி விசைத்தறி நெசவாளர்களுக்கு ,  மானியத்துடன் இலவச மின்சாரம் உள்புடா பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை குடும்ப மாணவர்களுக்கு அதிமுக அரசு 7.5 % இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் டாக்டராகி வருகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 68 மினி கிளினிக் கொண்டுவரப்பட்டது. திமுக அரசு  அதை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் 4,000 மினி கிளினிக் கொண்டு வரப்படும். ஏழை பெண்களுக்கு திருமண உதவி திட்டம் பட்டுப் புடவையுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். தீபாவளிக்கு பெண்களுக்கு  சேலை வழங்கப்படும். பொங்கலுக்கு  வேஷ்டி சேலை வழங்கப்படும் என்று பேசினார்.

அருப்புக்கோட்டைக்கு பிரசாரத்திற்கு வந்த எடப்பாடி யாருக்கு நகர கழகச் செயலாளர் சோலை. சேதுபதி வெள்ளி வேல் நினைவு பரிசு வழங்கினார். அண்ணா திமுக தொண்டன் ஆண் குழந்தைக்கு அகிலன் என்று பெயர் சூட்டினார். அருப்புக்கோட்டை அண்ணா திமுக பிரமுகர் சித்ரா ஜெய்சங்கர் தலைமையில் பாம்பே மெடிக்கல் அருகில் கும்பம் மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, வைகைச் செல்வன் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியம், சிவசாமி, ராஜவர்மன், அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சோலை சேதுபதி அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் யோக.வாசுதேவன், வடக்கு ஒன்றிய செயலாளர் போடம்பட்டி சங்கரலிங்கம், ஆத்திபட்டி கிளைக் கழகச் செயலாளர் அஜய் வாசுதேவன், நகர இலக்கிய அணி செயலாளர் சீனிவாசன், அருப்புக்கோட்டை நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா தலைமையில் 500 பெண்கள் பூரண கும்பம் மரியாதை, முளைப்பாரி கொண்டு வந்து வரவேற்றனர். பிஜேபி சார்பாக மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் , அண்ணா திமுக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய , தொழிற்சங்கம், இளைஞர் பாசறை,கிளைக் கழக பிற அணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து