Idhayam Matrimony

உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்: காதலனுடன் பேசிய மகளை சுட்டுக்கொன்ற தந்தை..!

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      இந்தியா
Gun 2023-10-05

லக்னோ, காதலனுடன் பேசிய விவகாரத்தில் பிளஸ் -2 மாணவியை தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் அம்பிதா கிராமத்தை சேர்ந்தவர் ஷல்பன். இவருக்கு முஸ்கன் (வயது 17) என்ற மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர். இதனிடையே, பிளஸ் 2 படித்து வந்த முஸ்கன் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகியுள்ளார். இருவரும் காதலித்த நிலையில் இது குறித்து முஸ்கனின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, முஸ்கனை கண்டித்த அவரது தந்தை ஷல்பன், இளைஞருடன் பழகுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும், இளைஞருடன் முஸ்கன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு முஸ்கன் மீண்டும் தனது காதலனுடன் செல்போனில் பேசியுள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த ஷல்பன் மகள் முஸ்கனை தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் முஸ்கனை ஷல்பன் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் முஸ்கன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். முஸ்கனை சுட்டுக்கொல்ல அவரது சகோதரனும், ஷல்பனின் மகனுமான 15 வயது சிறுவனும் உதவியுள்ளான். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷல்பனையும் அவரது மகனையும் கைது செய்துள்ளனர். குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் மகள் காதலித்ததால் சுட்டுக்கொன்றதாக ஷல்பன் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து