எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : கர்நாடக முதல்வர் மாற்றம் மற்றும் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது என்று கூறினார்.
கர்நாடகாவில் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியானது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “காங்கிரஸ் உயர் தலைமையின் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன். உயர் தலைமை முடிவு செய்தால், எனது பதவிக் காலத்தை முழுவதுமாக முடிப்பேன்.” என்றார்.
சித்தராமையாவின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவக்குமார், “முதல்வரின் கருத்துக்குப் பிறகு நான் என்ன அதுபற்றி சொல்ல முடியும். நாங்கள் அவரது வார்த்தையைப் பின்பற்றுகிறோம். அவரது வார்த்தையே இறுதியானது.” என்றார்.
அவரது டெல்லி பயணம் குறித்த கேள்விக்கு, “காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர் அம்பிகா சோனியின் வீட்டுக்குச் செல்வதற்காக நான் டெல்லி வந்தேன். அவரது கணவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றேன். நான் திஹார் சிறையில் இருந்தபோது சோனியா காந்தியுடன் அவர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர், என்னை ஒரு தம்பியைப் போல நடத்துகிறார். நான் ஏன் டெல்லி சென்றேன் என்பதற்கான காரணம் பற்றி மட்டுமே என்னால் பேச முடியும். உயர் தலைமையுடனான எனது சந்திப்பு குறித்து பொதுமக்களும், ஊடகங்களும் எதையும் விவாதிக்கலாம்; அதுபற்றி எனக்கு கவலை இல்லை.” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


