முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார், ஜி.எஸ்.டி. நடைமுறையில் புதிய மாற்றம் இன்று முதல் அமல்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Aadhaar-card

Source: provided

மும்பை : இன்று முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களுக்கு பல முக்கியமான நிதி விதிகள் மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. இதில் புதிய வங்கிக் காப்பாளர் விதிகள், ஆதார் புதுப்பித்தலில் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டணங்கள், என்.பி.எஸ்-ஐ யு.பி.எஸ்-க்கு மாற்றும் காலக்கெடு நீட்டிப்பு, மற்றும் எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை ஆகியவை அடங்கும்.

இன்று (நவம்பர் 1-ம் தேதி) முதல், வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு கணக்கு, லாக்கர் அல்லது பாதுகாப்பு காப்பகப் பொருளுக்கு 4 நபர்கள் வரை காப்பாளர்களாக நியமிக்க முடியும். இந்த நடவடிக்கை அவசர காலங்களில் குடும்பங்களுக்கான நிதி அணுகலை எளிதாக்குவதையும், உரிமை தொடர்பாக எழும் சட்டப் பிரச்சனைகளைக் குறைக்க கொண்டு வரப்படுகிறது. மேலும் காப்பாளர்களைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மற்றும் கட்டண அமைப்புகளிலும் மாற்றங்கள் காணப்பட உள்ளன. கல்வி தொடர்பான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு அதிகமாகச் செய்யப்படும் மூன்றாம் தரப்பு கட்டண செயலிகள் மற்றும் வாலெட் டாப்-அப்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு இனி 1 சதவீத கட்டணம் விதிக்கப்படும்.

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் புதுப்பித்தல் செயல் முறையை எளிதாக்க உள்ளது. இதன் மூலம் ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை ஆன்லைனிலேயே திருத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கைரேகைகள் அல்லது கருவிழி ஸ்கேன்கள் போன்ற பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு, ஒரு நேரடி ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டியது இன்னும் அவசியமாகும்.

புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75-ம், பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து தடையின்றி ஓய்வூதியம் பெற, ஓய்வு பெற்றவர்கள் இன்று முதல் 30 வரை தங்கள் வருடாந்திர வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்.பி.எஸ்.) இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (யு.பி.எஸ்.) மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) பதிவு முறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இது பதிவு செயல் முறையை எளிதாக்குவதற்கும், சிறு வணிகங்கள் இணங்குவதைச் சுலபமாக்குவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து