முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் குறித்து அச்சம் உள்ளது: அமைச்சர் துரைமுருகன்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-12-03

Source: provided

வேலூர் : வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 3-ம் தேதி வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கட்சியினர் சார்பிலும் செய்யப்பட்டு வருகிறது. அவர் 4-ம்  தேதி வேலூர் கோட்டை மைதானத்தில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக அங்கு விழா மேடை அமைப்பது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- மழைக்காலங்களில் அதிகப்படியான நீர் கடலுக்கு செல்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளை புனரமைக்க பூகோலப்படி, சாத்தியமா என ஆய்வு செய்கிறோம். அவ்வாறு ஆய்வுக்கு பின்னர் நிதி வசதி இருந்தால் செய்யலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வடமாநில தொழிலாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்ற கருத்து உள்ளது. இது ஆபத்து தான்.

ஒரே இடத்தில் 700 இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றால், அவர்களை வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் நீக்கிவிட்டு அவர்களின் பெயரை சேர்த்து விடுவார்கள். வாக்காளர்கள் சிறப்பு திருத்தத்தில் அச்சம் உள்ளது. அதுதான் பிரச்சனையே. ஆண்டாண்டு காலமாக இங்கிருந்து வாக்களிப்பவர்களை இல்லையென்று ஆக்கிவிடுவார்கள். எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து