முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      இந்தியா
Bus 2023 04 18

Source: provided

கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் 2026 ஜன.16-ந்தேதி வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள், குளிா்சாதன பேருந்துகள் மற்றும் குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30-ந்தேதி வரை மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26-ந்தேதி முதல் டிச.29-ந் தேதி வரை இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது.

நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பேருந்து வசதி செய்து தரப்படும்.

60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பேருந்துகளுக்கு இணையதளம் மூலமாக, மற்றும் டி.என்.எஸ்.டி.சி. எனப்படும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து