எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : டெல்லியில் ரஷ்ய அதிபர் புடின் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே, சுகாதார நலன் தொடர்பாகவும், துறைமுகம், கப்பல் போக்குவரத்து தொடர்பாகவும், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இருநாள் அரசுமுறை பயணமாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து, ரஷ்ய அதிபர் புடின் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின், இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்தினர். அப்போது இருநாடுகளுக்கு இடையே, சுகாதார நலன் தொடர்பாகவும், துறைமுகம், கப்பல் போக்குவரத்து தொடர்பாகவும், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, அறிவியல் தொடர்பாகவும், இந்தியா- ரஷ்யா இடையே பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் ஒப்பந்தம் கை யெழுத்தானது.
முன்னதாக, நேற்று (டிச.,05) காலை ஜனாதிபதி மாளிகையில், ரஷ்ய அதிபர் புடினுக்கு முறைப்படி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது. புடினை ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு சென்ற புடின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஆண்டு உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரெளபதி முர்மு அளிக்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


