முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதக்கலவரத்தை உருவாக்குவதே பா.ஜ.க.வின் நோக்கம்: கனிமொழி

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      இந்தியா
Kanimozhi 2023-10-13

Source: provided

புதுடெல்லி : மதக்கலவரத்தை உருவாக்குவதே பா.ஜ.க.வின் நோக்கம் என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் பிரச்சினையை எழுப்பினோம். ஆங்கிலேயர்கள் வைத்த நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றச்சொல்கின்றனர். மக்களின் பக்தியை நிறுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.மதம்,பக்தியின் பெயரால் குளிர்காய நினைக்கிறது பா.ஜ.க.. பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

திராவிட கட்சிகளின் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்து கொள்ளவில்லை. திராவிட கட்சிகளின் ஆட்சியில் மதப்பிரச்சினைகள் இல்லாத அமைதியான தமிழகமாக உள்ளது. தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்குவதே பா.ஜ.க.வின் நோக்கம்.திருப்பரங்குன்றம் விவகாரத்தை மற்றொரு அயோத்தி என சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எங்காவது அமைதி நிலவுகிறதா? என கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து