முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனிக்கட்சி குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
OPS-1 2023 04 24

Source: provided

சென்னை : தனிக்கட்சி தொடங்குகிறேனா என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை எடுத்துக் கூறினேன்.

அ.தி.மு.க.வை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். அதுவே தமிழக மக்களின் கருத்தாகவும் இருக்கிறது என்பதை தெரிவித்திருக்கிறேன்" என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை கேட்ட கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: 15-ந்தேதி தனிக்கட்சி தொடங்குகிறீர்களா?

பதில்: உங்கள் கேள்வியே தவறு. நான் எந்த சூழ்நிலையிலும், எப்போதும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை.

கேள்வி: உங்களுடன் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார். நீங்கள் எதாவது அவரிடம் பேசினீர்களா? நீங்களும் கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புள்ளதா?

பதில்: அவர் என்னிடம் பேசவில்லை. நான் அவரிடம் பேசவும் இல்லை.

கேள்வி: அடுத்த கட்ட நகர்வு என்ன?

பதில்: அடுத்த கட்ட நகர்வு கழகத்தின் தொண்டர்களின் எண்ணப்படி, மக்களின் எண்ணப்படி தான் இருக்கும்.

கேள்வி: 2026 சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய பங்களிப்பு எப்படி இருக்கும்?

பதில்: எதற்கு அவசரப்படுகிறீர்கள்? இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. பொறுத்திருங்கள்; நல்ல செய்திகள் வரும்.

கேள்வி: அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்?

பதில்: ஜனநாயக நாடு இது. யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து