முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கம்

வெள்ளிக்கிழமை, 5 டிசம்பர் 2025      தமிழகம்
Ooty-train-2023-12-14

ஊட்டி, மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் வருகிற கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலைரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வருகிற 25, 27, 29, 31, அடுத்த மாதம்(ஜனவரி) 2, 4, 15, 17, 23, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை மதியம் 2.25 மணிக்கு சென்றடையும். இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 26, 28, 30, அடுத்த மாதம் 1, 3, 5, 16, 18, 24, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து