முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1,609.69 கோடி ரூபாய் மதிப்பிலான பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்

சனிக்கிழமை, 6 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்க ரூ.1,609.69 கோடி மதிப்பிலான முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை இன்று உத்தங்குடியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட மதுரை மாநகரின் இன்றைய ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர். ஆனால், மாநகராட்சிக்கு வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர் ஆக மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டுகிறது.

அதனால், நாளொன்றுக்கு 7 கோடி லிட்டர் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. வைகை அணை நீர்மட்டம் குறைந்தால் கடந்த காலத்தில் மதுரை மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையால், அன்றாட தேவைக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு மதுரையின் குடிநீர் தேவையை மதிப்பீடு செய்த மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு 2034-ல் நகரின் தினசரி 317 மில்லியன் லிட்டர் குடிநீரும், 2049-ல் நகரின் தினசரி 374 மில்லியன் லிட்டர் குடிநீரும் தேவைப்படும் எனக் கூறியிருந்தது.

அதன் அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், மதுரை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்பிலிருந்து நேரடியாக மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டா் குடிநீர் கொண்டு வருவதற்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தாமதத்தால் திட்டமதிப்பீடு ரூ.1,609.69 கோடியாக உயர்ந்துள்ளது. இடையில் சில காலம் முடங்கி கிடந்த இந்த திட்டம், சமீபகாலமாக வேகமெடுத்து நிறைவுபெறுவதற்கு மாநகராட்சி ஆணையர் சித்ரா முக்கிய காரணம். அவர் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி லோயர் கேம்ப், பண்ணைப்பட்டி ஆய்வுக்குச் சென்றும், அன்றாடம் இந்த திட்டப்பணி விவரங்களை அதி்காரிகளிடம் கேட்டு, விரைவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், வார்டுகளில் தினமும் அல்லது 2 நாளைக்கு ஒரு முறை சுகாதாரமான குடிநீரை மாநகராட்சி வழங்கி வருகிறது. இன்று மதுரை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தங்குடியில் நடக்கும் அரசு விழாவில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து