முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? த.வெ.க. ஆனந்தை கடுமையாக எச்சரித்த புதுவை பெண் எஸ்.பி.

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2025      தமிழகம்      அரசியல்
Isha-Singh-IPS-1-2025-12-09

சென்னை, கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தை புதுச்சேரி பெண் எஸ்.பி. கடுமையாக எச்சரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

த.வெ.க. தலைவர் விஜயின் கரூர் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் முடிந்து 72 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில்,  புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள த.வெ.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் விரிவான சாலை வசதிகள் இல்லாததாலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அம்மாநிலத்தின் முதலமைச்சரை சந்தித்துப் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அந்த வகையில், புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. காலை 10.30 மணிக்கு ஹெலிபேடு மைதானத்திற்கு வந்த விஜய் பிரசார மேடையில் உரையாற்றினார். விஜயைப் பார்ப்பதற்காக ஏராளமான இளைஞர்கள், தொண்டர்கள் குவிந்தனர். கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் நடக்கும் கூட்டம் என்பதால் அசம்பாவிதம் ஏற்படாத வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டிருந்தன. ஆனால், காலை முதலை ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்த நிலையில் போலீஸார் அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கியூஆர் கோடு இல்லாமலேயே சில தொண்டர்களை உள்ளே செல்ல அனுமதித்தார். அங்கிருந்த அனைவரையும் உள்ளே விடுமாறு மற்றொரு த.வெ.க. நிர்வாகியும் கூறினார். இதனைப்பார்த்து கோபம் அடைந்த பெண் காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங், புஸ்சி ஆனந்த் உள்பட த.வெ.க. நிர்வாகிகளை எச்சரித்தார். கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு. தான் என்ன வேலை செய்ய வேண்டும் என்று த.வெ.க. நிர்வாகிகள் கூறக் கூடாது என்று கூறி, பாஸ் இல்லாதவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து