இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது. தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.
![]() 3 days 18 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
![]() 6 days 9 hours ago |
உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பல் துலக்கும் பற்பசை பிளாஸ்டிக் டியூப்களில் அடைக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கால் இன்றைக்கு உலகமே தத்தளித்து வருகிறது. எனவே இதற்கு மாற்றாக கனடாவைச் சேர்ந்த மைக் மெடிகாஃப் (mike medicoff) மற்றும் டாமியென் வின்ஸ் (damien vince) ஆகிய இருவர் காகித கேப்ஸ்யூல்களை கண்டு பிடித்துள்ளனர். காகிதத்தால் ஆன இதில் பற்பசை நிரப்பப்பட்டிருக்கும். அதை வாயில் போட்டு ஒரு கடி... அவ்வளவுதான் கேப்ஸ்யூல் கரைந்து விடும்.. பற்பசை வாயில் நிரம்ப.. ஃப்ரெஷ்ஷால் பல் துலக்க வேண்டியதுதான்... வெகு விரைவில் இந்தியாவுக்கு வரும்.. இனி பற்பசைக்கான பிளாஸ்டிக் தேவையில்லை..
தொலை தூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகள் வானில் கூட்டமாக பறப்பதை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் ஆங்கில 'V'வடிவில் பறப்பதை காணலாம்.. அது ஏன் அவ்வாறு பறக்கின்றன.. அவ்வாறு 'V' வடிவில் பறப்பதால் அவை ஆற்றலை சேமிக்கின்றன..தனியாக பறக்கும் பறவை காற்றால் பின்னுக்கு இழுக்கப்படும் விசையிலிருந்து, இவ்வாறு கூட்டமாக 'V' வடிவில் பறக்கும் போது அது தடுக்கப்படுகிறது... இதனால் அவற்றால் வெகு தொலைவுக்கும், இலகுவாகவும் பறக்க முடிகிறது.. மேலும் சக பறவைகளை எந்த நிலையிலும் பார்க்க முடிவதால் பாதுகாப்பாகவும் பின்தொடர முடிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சிம் கார்டில் நெட்வொர்க் கவரேஜ் முற்றிலும் இல்லாத நேரங்களிலும், குறைவாக உள்ள நேரங்களிலும் WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்தி சிரமமின்றி பேசலாம். எப்படி தெரியுமா... நாம் பயன்படுத்துகின்ற சிம் கார்டின் மூலமாகவே குரல் வழி (Voice Call) அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு தேவை WiFi இணைப்பு மட்டுமே. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது. VoLTE-க்கு மாற்றாக VoIP (voice over Internet protocol) மூலம் இந்த WiFi காலிங் வசதியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் கொண்ட போன்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி உள்ளது. பழைய போனை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் சென்று இந்த சேவையை Enable செய்து கொள்ளலாம்.
சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. தற்போது சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. விலையும் மிகவும் குறைவுதான். ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பிறகென்ன வீட்டில் எங்கு தேவையோ வாங்கி மாட்டுங்கள்.. இனி திருடன் உங்களிடம் வாலாட்ட முடியாது..
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() 1 month 1 week ago |
![]() 1 month 3 weeks ago |
![]() 2 months 19 hours ago |
![]() 2 months 1 week ago |
![]() 2 months 1 week ago |
![]() 2 months 4 weeks ago |
பொரி உப்புமா
3 days 12 hours ago |
கடாய் வெஜிடபிள்
5 days 15 hours ago |
தக்காளி ரசம்
1 week 2 days ago |
தக்காளி ரசம்
1 week 2 days ago |
கேரளா குடம்புளி மீன் குழம்பு
1 week 5 days ago |
தக்காளி சட்னி
2 weeks 2 days ago |