பொதுவாக தாவரங்களைத்தான் விலங்குகளும், பூச்சிகளும், புழுக்களும் சாப்பிடும். ஆனால் புழு, பூச்சிகளை சாப்பிடும் தாவரங்களும் இருக்கின்றன என்பது ஆச்சரியம் தானே.. ஆனால் உண்மைதான். Carnivorous plant என்ற தாவரம் ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. அதான் விலங்குகளை விரும்பி உண்ணக் கூடியது. இவை பெரும்பாலும் பூச்சிகளையும், ஊர்வனவற்றையுமே குறி வைக்கின்றன. இதற்காகவே இவை சிறப்பான வடிவமைப்பை பெற்றுள்ளன. இதன் இலைகள் அருகில் வரும் பூச்சிகளை அப்படியே லபக் கென்று கவ்வி பிடித்து மூடிக் கொள்கின்றன. அதன் பின்னர் அதில் சுரக்கும் ஒரு வகை திரவம் அப்படியே பூச்சிகளை தின்று செரிக்க உதவுகின்றன. பெரும்பாலும் மண்ணில் நைட்ரசன் சத்து குறைவாக உள்ள சதுப்பு நிலங்களிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன. ஆகவே பூச்சிகளை விழுங்கி அதன் உடலில் உள்ள புரதத்தில் கலந்திருக்கும் நைட்ரசனை உறிஞ்சி விடுகின்றன.. நம்மூர்களில் இல்லை எனவே நாம் பயப்படத் தேவையில்லை..
![]() 4 days 1 min ago |
4 days 4 min ago |
![]() 4 days 6 min ago |
![]() 5 days 18 hours ago |
![]() 5 days 18 hours ago |
![]() 5 days 18 hours ago |
நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆப்பிள் பழங்கள் வாங்கும் போது அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அது எதற்காக என யாருக்கும் தெரியாது. அது என்ன? இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் ஒளிந்துள்ளன.PLU code (price lookup number) எனப்படும் இதை வைத்து தான் அந்த ஆப்பிள் ரசாயன உரங்களில் விளைவிக்கப்பட்டதா, மரபணு மாற்றம் செய்யப்பட்டதா, இயற்கை உரத்தில் விளைந்ததா என்பதை அறிய இயலும். இதை எப்படி தெரிந்து கொள்வது.. அதில் 4 இலக்க எண் இருந்தால் ரசாயன உரத்தால் ஆனது, ஐந்து இலக்க எண் 8 இல் தொடங்கினால் அது மரபணு மாற்றப்பட்டது. ஐந்திலக்க எண் 9 இல் தொடங்கினால் முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிளை பார்த்து வாங்குவீர்கள் தானே...
அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவை தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆச்சரியம் உண்டு! அப்பறவை, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது! கடலின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுக்கும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஒரு சிறிய பறவைக்கு 16,600 கி.மீ., பறப்பதற்கு ஒரு சிறுகுச்சி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே..
உங்கள் ஆதார் அட்டையை நீங்கள் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவுக்கு மோசடி செய்பவர்களால் அணுகப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதார் அட்டையை வைத்திருப்பவர்களுக்கு தனது ஆதார் எண்ணை லாக் மற்றும் அன்லாக் செய்யும் வசதியை UIDAI அறிமுகப்படுத்தியுள்ளது. Lock/Unlock செய்வது எப்படி? https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்லவும்.‘Aadhaar service’ என்ற பிரிவின் கீழ் ‘Lock & Unlock’ என்பதை கிளிக் செய்யவும். UID பட்டனை செலக்ட் செய்து அதில் உங்களது UID நம்பர், பெயர், PIN code உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும். Send OTP’ என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும். இப்போது உங்களது ஆதார் எண் லாக் செய்யப்பட்டுவிடும். மீண்டும் உங்களது ஆதார் எண்ணை அன்லாக் செய்வதற்கு ஆதார் வலைப்பக்கத்தில் Unlock பட்டனை கிளிக் செய்து விர்ச்சுவல் ஐடியைப் பதிவிட்டு send OTP மற்றும் submit கொடுத்தால் அன்லாக் ஆகிவிடும். அவ்வளவுதான்.
இதென்ன புதுக்கதையாக இருக்கிறது என்று ஆச்சரியப்பட வேண்டாம்... கருப்பு நிற ஆடைகள், அடர் நிற ஆடைகள் நிறம் மங்கி விட்டதா.. கவலை வேண்டாம். இரு கோப்பை காபி போதும்.. காஃபி மேக்கரில் நன்றாக தயார் செய்யப்பட்ட 2 கோப்பை காஃபி டிகாக் ஷனை எடுத்து கொள்ளுங்கள்...வாஷிங் மெஷினில் வெளுத்து பல்லிளிக்கும் அடர் மற்றும் கருப்பு நிற துணிகளை போடுங்கள்.. கூடவே காபி டிகாக் ஷனை சேருங்கள்... அலசும் ஆப்ஷனை ஆன் செய்யுங்கள்... அவ்வளவுதான் வாஷிங் மெஷின் நின்றதும் எடுத்து துணிகளை காயப் போடுங்கள்..புத்தம் புதுசாக இருக்கும்...
சூரிய மண்டலம் தொடங்கி பால்வெளி பாதை வழியாக பிரபஞ்சம் முழுவதும் பயணித்தால்.. அப்படி மனிதனால் பயணிக்க இயலாது.. ஒரு வேளை பயணித்தால்.. பூமியைப் போன்ற நீரும், ஜீவராசிகளும் வசிக்கும் இன்னொரு பூமியை கண்டுபிடிக்க முடியுமா.. முடியவே முடியாது.. இந்த பிரபஞ்சத்தில் ஒரே ஒரு உயிர்க்கோளமான பூமி மட்டும்தான்...ஆனாலும் விஞ்ஞானத்தின் தேடல் தீராது.. அது கிடக்கட்டும்..அப்படியானால் பூமி போல செயற்கை பூமி செய்ய முடியுமா.. அது போன்ற ஒன்று இருக்கிறதா... என்றால் ஆம் அல்லது இல்லை... ஆம் என்ற பதில் மூலமாக நாம் அமெரிக்காவுக்கு சென்றால் அங்குதான் செயற்கை பூமி உள்ளது.. இன்றைக்கு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளால் மாசுபட்டு கிடக்கும் பூமிக்கு மாற்றாக.. எந்த வித செயற்கையும் இன்றி இயற்கையாக இருக்கும் வகையில் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தின் டஸ்கர் என்ற நகரிலிருந்து 64 கிமீ தொலைவில்தான் அது அமைக்கப்பட்டுள்ளது. ஆரக்கிள் என பெயரிடப்பட்டுள்ள அந்த சிறிய செயற்கை பூமி கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் பூமி தோன்றிய போது எப்படி இருந்ததோ அதே போன்று தூய்மையாக....உயரிய தொழில் நுட்ப செயற்கை கண்ணாடி தடுப்பு சுவர்களுக்குள் 3.4 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிகாற்று உள்ளே செல்லவோ, உள்ளிருக்கும் காற்று வெளியே வரவோ இயலாது. அங்கே, மழைக்காடுகள், பவளப்பாறைகள், வெப்ப மண்டல மரங்கள், உயிரினங்கள் என அனைத்தும் மிகவும் சுதந்திரமாக திரிகின்றன. அதற்கு இடையூறு இன்றி அவை விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்படுகின்றன.. என்ன கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() 1 month 2 weeks ago |
1 month 3 weeks ago |
1 month 3 weeks ago |
1 month 4 weeks ago |
2 months 1 day ago |
2 months 2 days ago |