வாழைப்பழம் நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. 12 நாட்கள் தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். இந்த டயட் மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பச்சை கீரை வகைகள் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
![]() 3 days 18 hours ago |
3 days 18 hours ago |
![]() 3 days 18 hours ago |
![]() 5 days 12 hours ago |
![]() 5 days 12 hours ago |
![]() 5 days 12 hours ago |
மனித உடலில் தோலின் செயல்பாடு குறித்து நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில் குறிப்காக, மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவதுதான் என்பது. முதலில் இந்த சோதனையை ஒரு சுண்டெலியின் மீது நடத்தப்பட்டது. மிக குறைந்த அளவிலான ஆக்சிஜன் உள்ள இடத்திலும், அதிக அளவிலும், மிதமான அளவிலும் ஆக்சிஜன் உள்ள இடங்களிலும் வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் மூலம், ரத்த அழுத்தம், இதய துடிப்பு போன்றவை சீராக செயல்பட தோல் உதவுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மூலம் மனிதர்களின் உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பை சீராக வைப்பதில் தோலின் பங்கு மிக முக்கியம் என்பது தெரிய வந்துள்ளது.
மனிதர்களின் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் ஹ்மனாய்டு ரோபோக்களின் தயாரிப்பு சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் குரல் கட்டளைகளை ஏற்று அதனை பிற மொழிகளில் மொழி பெயர்த்து தரும் நவீன ரக மொழிபெயர்ப்பு கருவி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘இலி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பென் டிரைவ் போன்ற வடிவத்தை கொண்ட இந்தக் கருவி ஆங்கிலத்தில் விடுக்கப்படும் குரல் கட்டளைகளை ஏற்று, அதற்குரிய சீன, ஜப்பான் மற்றும் ஸ்பானிஷ் சொற்களை ஒலி வடிவில் தருகிறது. இந்தக் கருவியின் சிறப்பு, இதை பயன்படுத்துவதற்கு இணைய வசதி என்பது தேவையில்லை என்பது மற்றும் 2 நொடிகளில் மொழிப்பெயர்பை கேட்கலாம்.
பிரேசில் நாட்டின் ஹோர்டோலண்டியா பகுதியில் உள்ள உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. அப்போது, 245 பேர் இணைந்து ஒரே நேரத்தில் பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். 245 பேரும் பாலத்தில் ஊஞ்சல் ஆடுவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய கோப்பை ரூ.245 கோடிக்கு (37.7 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது சாங் மன்னர் ஆட்சி காலத்தில் அதாவது கி.பி.960-1127-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கோப்பை ஹாங்காங் கில் சோத்பீ மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு மிங் மன்னர் ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட சீன கோப்பை அதிகபட்சமாக ரூ.233 கோடிக்கு ஏலம் போனது.
பயனாளர்களுக்கு இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் ‘லைவ் லொகேஷன்’ என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியுமாம்.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() 1 month 2 weeks ago |
1 month 3 weeks ago |
1 month 3 weeks ago |
1 month 4 weeks ago |
2 months 1 day ago |
2 months 2 days ago |