முக்கிய செய்திகள்

தேனீக்கள் : ஒரு லிட்டில் ஸ்டோரி

முகப்பு

தேனீக்கள் : ஒரு லிட்டில் ஸ்டோரி

Bees 2021 10 12

ஓய்வில்லா உழைப்புக்கு மட்டுமல்ல சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கு தேனீயே அடையாளமாக இருக்கின்றது ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. எனவே உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடியும் தேனீதான். தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  மொத்தம் 44 இனங்கள் உள்ளன. அறிவியலில் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவை தேனீக்கள். 

மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களில் முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களில் மிகப் பெரியது. தலைமை வகிக்கும். இதன் ஆயுள் 3 ஆண்டுகள். இதன் வேலை இனப்பெருக்கம் செய்வது. 2 ஆவது ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, ராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. 3ஆவது வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்தையும் செய்யும். இதன் ஆயுள் 2 மாதங்கள். செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது வேதனைக்குரியதுதானே..

இதை ஷேர் செய்திடுங்கள்: