முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மிளகு ஓரிஜினலா, கலப்படமா...

Image Unavailable

நாம் வாங்கும் பொருள் ஓரிஜினலா கலப்படமா என்ற குழப்பம் எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக அதிக விலை கொடுத்து வாங்கும் மிளகில் கலப்படத்தை எப்படி கண்டு பிடிப்பது..  இதற்காக  சோதனைச்சாலைக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை.. அதை நீங்கள் வீட்டிலேயே வைத்து கண்டுபிடித்து விடலாம்.. எப்படி என்று பார்க்கலாமா...

 

சிறிய அளவு கருப்பு மிளகு எடுத்து மேஜை மீது வைத்து கட்டை விரலால் இந்த மிளகை அழுத்தவும். அல்லது நசுக்கவும். மிளகு அவ்வளவு எளிதில் உடையாது. ஆனால் அதில் கலப்பட மிளகு இருந்தால் நீங்கள் அதை நசுக்க முடியும். நசுக்கப்பட்ட மிளகு ஒளி வெளிர் கருப்பட்டிகளாக மாறும். மிளகை சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போடவும். மிளகு தரமானதாக இருந்தால் தண்ணீரின் அடியில் மூழ்கி விடும். மிளகு போலியானதாக இருந்தால், பப்பாளி விதையாக இருந்தால் அது நீரில் மிதக்க செய்யும். மிளகை கடித்தால் காரத்தன்மையுடன் இருக்கும். பப்பாளி விதையாக இருந்தால் அது வாசனை தன்மையற்று, சுவையற்று சுருங்கி இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்