சிவராத்திரி கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

ராஜ்கோட்,பிப்.21 -குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ் கோட் சிவன்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலியானார்கள். குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகேயுள்ள பவநாத் சிவன் கோவில் மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் நடைபெறும் 5 நாள் மகாசிவராத்திரி விரழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம். வழக்கத்தை விட இந்த ஆண்டு 9 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இவ்விழாவிற்கு வந்தனர். 

கோவிலுக்கு வருவதற்கு முன் பக்னாலா பாலத்தை கடக்கவேண்டும். நேற்று முன் தினம் பாலத்தை கடப்பதற்கான ஒரே சமயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கடக்க முற்பட்டனர். இதனால் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டு இது கலவரமாக வெடித்தது. இதனால் மக்கள் பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள், ஒரு கைக்குழந்தை உட்பட 8 பேர் பலியானர்கள். 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்து போன பக்தர்களில் 3 பேர் மட்டுமே அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். விஜாப்பூரைச் சேர்ந்த டிங்கு பன்மிக்கு பாய், ஜாம்நகரைச் சேர்ந்த ஜேசுபாய், ஜன்தன்ராவல் ஆகியோரின் பிணம் மட்டும் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நெரிசலால் பாலத்தின் கைப்பிடிச்சுவர் உடைந்ததும் இந்த விபத்திற்கு காரணம் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: