மாமல்லபுரம் கோவிலை கையகப்படுத்த வைகோ எதிர்ப்பு

புதன்கிழமை, 30 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, மே.31 - மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல்பெருள் துறையினர் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலகப் புராதன சின்னங்களாக தமிழகத்தின் பழமையான 2 நகரங்களில் முதன்மையானது பல்லவப் பேரரசின் துறைமுகப்பட்டினமான திருக்கடல்மல்லை என்னும் மாமல்லபுரம். இங்கு அமைந்துள்ள தலசயனப் பெருமாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 63-வது ஆலயமாக எளிமையாக தரையில் பள்ளிகொண்டு இருப்பதால், தலசயனப் பெருமாள் என்று அழைக்கப்பெற்றது.

அன்று முதல் இன்று வரை இந்த ஆலயத்தில் nullஜைகள், சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் முறையாக நடந்து வருகின்றன. ஏற்கனவே 6ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் nullஜைகள் இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி உள்ளது.

சிதிலமடைந்து சீரழிந்து கிடக்கும் நமது பண்பாட்டு அடையாளங்களை எடுத்து புனரமைக்காமல் தமிழக இந்து அறநிலையத் துறையின் மூலமும், பக்தர்கள் மற்றும் நல்லன்பர்களின் முயற்சியாலும் சீராக இயங்கி வரும் ஆலயத்தை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

பொது மக்களின் கருத்து அறியப்படாமல், மாநில அரசின் ஒப்புதல் பெறாமல், மத்திய காங்கிரஸ் அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எதேச்சதிகாரமானது. ஏற்கனவே இந்திய தொல்பொருள் துறையின் 2010ம் ஆண்டு மக்கள் விரோத சட்டத்தால் மாமல்லபுரம் வாழ் மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளானார்கள்.

இதனால் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் நடைபெற முடியாமல், புதிய கட்டிடம் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை புதுப்பிப்பதற்கும், மின் இணைப்பு பெறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 13-வது வார்டு அண்ணா நகர் புல எண்.160/2 கிராம நத்தத்தில் குடியிருக்கும் சுமார் 500 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க ஆட்சேபணை செய்தும் ஒட்டு மொத்தமாக மாமல்லபுரம் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் சட்டத்தின் மூலம் முடக்கப்பட்டதால் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரி இன்று நரகமாக மாறி போய் உள்ளது.

இந்நிலையில் தலசயனப் பெருமாள் கோவிலை கையகப்படுத்தி பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறித்து அரவங்காடாக மாற்றிட முனைகிறார்கள். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் ஆலயத்தை மத்திய தொல்பொருள் துறையினர் கையகப்படுத்த இருந்ததை அரசியல் கட்சிகள், பொதுநலச் சங்கங்கள், பொது மக்கள் இணைந்து எதிர்த்து போராடி மத்திய தொல்பொருள் துறையின் முயற்சியை முறியடித்ததை போன்று அனைத்து ஜனநாயக அமைப்புகளும், பொது மக்களும் இணைந்து இதை முறியடிக்க வேண்டும்.

மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிக்கின்ற மத்திய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளில் ஒன்று தான் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலை கையகப்படுத்த நினைக்கும் முயற்சி என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: