முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர்களை அழித்தவர் கருணாநிதி - விஜயகாந்த்

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஈரோடு,ஏப்.2 - ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் சந்திரகுமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, விலைவாசி நாளுக்கு நாள் விஷம் போல் ஏறிக் கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக ஏறி விட்டது. ஆகவே பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பெரியார் ஆரம்பித்த அலுவலகத்தில் அச்சு கோர்க்கும் வேலையில் சேர்ந்த கருணாநிதிக்கு அப்போதே திருட்டு புத்தியும் ஆரம்பித்து விட்டது. அண்ணா இறந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்த போது நான் பின்தங்கியவன் எனக் கூறி எம்.ஜி.ஆரை ஏமாற்றி முதல்வரானவர் கருணாநிதி. 

இங்கு தி.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் முத்துச்சாமி எம்.ஜி.ஆர் போட்ட பிச்சையால் வாழ்வு பெற்றவர். எனவே பொதுமக்களை ஏமாற்றும் கருணாநிதி தேவையா? மக்களுக்கு நல்வாழ்வு அமைத்து தரும் ஜெயலலிதா வேண்டுமா? என சிந்தித்து பார்த்து வாக்களியுங்கள். இங்கு தமிழ், தமிழ் என்று பேசும் கருணாநிதி இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படும் போது தனது சுய லாபத்திற்காக அமைதியாக இருந்தார். 

கருணாநிதியின் ஆட்சியில் நீதிபதிகளுக்கு அடி விழும் அவல நிலை ஏற்பட்டது. திருட்டு ரயில் ஏறி வந்த கருணாநிதி நாட்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்யமுடியும். தமிழ்நாட்டை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொரு பகுதியாக பிரித்துக்கொண்டார்கள். ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் இந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தால் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக கருணாநிதி கூறியுள்ளார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி இதை நிறைவேற்றாமல் 6 வது முறையாக மீண்டும் முதல்வர் ஆனால் நிறைவேற்றுவேன் என்று கருணாநிதி பொய் பேசுகிறார். மக்களை ஏமாற்றுவதில் கருணாநிதி பெரிய கில்லாடி. இல்லாவிட்டால் ஊழல் பேர்வழிகள் என்று இவரால் கூறப்பட்ட செல்வகணபதியையும் இந்திராகுமாரியையும் தன்னுடன் சேர்த்துக்கொள்வாரா? இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி மாபெரும் வெற்றி பெறவேண்டும். கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. எம்.ஜி.ஆர் எனது மானசீக குரு அதனால் தான் அவர் தோற்றுவித்த கட்சியை ஆதரித்து மீண்டும் அது ஆட்சிக்கு வர பாடுபடுகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago