முக்கிய செய்திகள்

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விமானம் மூலம் பணம் கடத்தல்?

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      இந்தியா
indianairlines

 

புது டெல்லி,ஏப்.12 - தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் பணம் கடத்தப்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று உள்நாட்டு விமான போக்குவரத்து துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

உள்நாட்டு விமான போக்குவரத்து துறை செயலாளர்கள் மட்டத்திலான கூட்டத்தினை அண்மையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்தினர். அப்போது தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் அதிக பணம் எடுத்து செல்ல வாய்ப்பிருப்பதால் அது பற்றி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் கூடுதலை சிசிடிவிக்களை பொருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். யாராவது அதிகளவில் பணமோ, தங்கமோ எடுத்து சென்றால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறை மற்றும் தொடர்புடைய துறைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: