முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை வீதிகளில் உணவு விற்போர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஏப்.16 - மும்பையில் தெருக்களில் உணவு பண்டங்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ராஜ்தாக்ரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கோரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் உள்ள தெருக்களில் பானிபூரி, பேல் பூரி போன்ற உணவுப்பண்டங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. நடைபாதைகளின் ஓரம் இந்த நடமாடும் உணவு கடைகள் ஏராளமாக உள்ளன. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நடமாடும் உணவுக்கடைகளுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்தாக்ரேவும் அவரது கட்சியினரும் பானிபூரி, பேல்பூரி கடைகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். சுத்தமில்லாமல் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்வதாக கூறி அந்த ஸ்டால்களை இவர்கள் உடைத்து நொறுக்கினர். இந்த கடைகளை அகற்ற மகாராஷ்டிர மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு மும்பை மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் அரவிந்த் கவாடே கோரிக்கை விடுத்துள்ளார். மக்களுக்கு சுகாதாரமில்லாத உணவு பண்டங்களை விற்பனை செய்யும் இந்த வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எழுத்து மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உணவு பண்டங்கள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மேலும் இந்த உணவுகடைகள் சட்ட விரோதமாக செயல்பட்டுவருகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago