வாடிகன்மார்ச்.20 - போப் ஆண்டவராக தேர்வு பெற்ற பிரான்சிஸ் நேற்று பதவியேற்றார். போப் ஆண்டவராக இருந்த ராட்சிங்கர் ராஜினாமா செயததை அடுத்து புதிய போப் ஆண்டவராக அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்காலியோ(71) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது பெயரை பிரான்சிஸ் என்று மாற்றிக்கொண்டார். இவரது பதவியேற்பு விழா வாடிகனில் உள்ளஅ புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அர்ஜெண்டினா நாட்டு அதிபர் கிறிஸ்டினாகிரிச்சினர். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், பிராசின் ஜீன் மார்க் அய்ரவுல்ட் , அமெரிக்க துணை அதிபர் ஜோபைடன் உட்பட பல நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நேற்று பதவியேற்ற போப் பிரான்சிஸ் 266-வது போப் ஆண்டவாராவார். போப் ஆண்டவர் அணியும் மோதிரம் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மோதிரம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.