முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவை வாலிபர் மீது துணை நடிகை கற்பழிப்பு புகார்

வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

புதுச்சேரி, ஏப்.19 - சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் ரெமோலா(21). பல சினிமா படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மாடலிங் தொழிலும் செய்து வருகிறார். அவர் நேற்று புதுவை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ராமராஜூவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் பிடெக் ஏர்கிராப்ட் என்ஜினியரிங் படித்துள்ளேன். எனது அம்மா வழி உறவினர்கள் புதுவையில் உள்ளனர். இதனால் 5-ம் வகுப்பு வரை நான் புதுவையில் தங்கி ப டித்து வந்தேன். பின்னர் கேரளாவுக்கு படிக்க சென்று விட்டேன். நான் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் தொழில் செய்து வருகின்றேன். 

அப்போது ஒரு டிவியில் பேட்டி கொடுத்தேன். புதுவையில் ஏற்கனவே அறிமுகமான ஒரு வாலிபர் அதை பார்த்து விட்டு என்னுடன் போனில் தொடர்பு கொண்டு பேசினார். 

அவர் சினிமா துறையில் லொகேஷன் மேனேஜராக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து நாங்கள் இருவரும் போனில் தொடர்ந்து பேசிக் கொண்டோம். தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும், மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். 

ஒருதடவை அவர் என்னிடம் புதுவைக்கு அவசரமாக வரும் படி கூறினார். அதை தொடர்ந்து நான் புதுவை வந்தேன். 

இங்கு அவர் ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் என்னை வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இதனால் நான் கதறி அழுதேன். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். 3 நாட்களாக லாட்ஜிலேயே அடைத்து வைத்து தவறாக நடந்து கொண்டார். பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். 

திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டபோது என்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார். என்னிடம் இருந்து ஏராளமான பணத்தையும் பறித்துக் கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் ரெமோலா அந்த வாலிபருடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். போலீசார் இதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!