முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் தாக்கப்பட்டால்.... நடிகர் விஜய் ஆவேச பேச்சு

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

நாகை.பிப்.23 - தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதை கண்டித்து நாகையில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நடிகரும், மக்கள் இயக்கத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசியதாவது,

மீனவர்களுக்கு கடல்தான் தாயகம் அவர்கள் பிழைப்பதற்காக உயிரை பணயம் வைத்து கடலுக்குள் மீன் பிடிக்கப்போனால் சிங்கள ராணுவத்தினர் மீனவர்களை சுட்டுக் கொல்வதும் சிறை பிடித்து சென்று சித்திரவதை செய்வதும் வலைகளை அறுப்பதும் வாடிக்கையாக செய்து வருகின்றனர். நாம் இலங்கை ராணுவத்திற்கு அடங்கி விட்டோம் என்று நினைக்க வேண்டாம். நாம்  அனைவரும் புலிக்குட்டிகள். உலக வரைபடத்தில் இலங்கை இருக்காது என எச்சரிக்கிறேன். மத்திய அரசும் மாநில அரசும் மீனவர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது. கருணாநிதிக்கும் மன்மோகன்சிங்கிற்கும் லட்சக்கணக்கான தந்திகளை அனுப்ப வேண்டும். ஏதோ வந்தோம் கூடினோம் என்று இல்லாமல் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பேசினார்.

மேடையில் இலங்கை ராணுவத்தினரல் பாதிக்கப்பட்ட சின்னங்குடி பாண்டி, புஷ்பவனம் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இரண்டு பேர்களுக்கு தையல் இயந்திரங்களும் பத்து நபர்களுக்கு மீன் பிடி வலைகளையும் வழங்கினார். முன்னதாக பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்திற்கு நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனரும் மக்கள் இயக்க பொதுச்செயலாளருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் ரவிராஜா, துணைத்தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் ஏ.சி.குமார் மாநில மக்கள் தொடர்பாளர் செல்வக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சரவணன், நாகை இளைய தளபதி சுகுமார் மற்றும் நிர்வாகிள் பலர் செய்திருந்தனர்.

 

போலீசார் அலட்சியத்தால் மேடை ஏற முடியாமல் நடிகர் விஜய் தவிப்பு

 

 நாகையில் கண்டன பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த நடிகர் விஜய் மாலை 6 மணிக்கு மேடையேறினார். அப்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் முண்டியடித்து கொண்டு மேடையேற முற்பட்டனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு போலீசார் குறைந்த அளவே இருந்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினார்கள். இதனால் நடிகர் விஜய் மேடையிலிருந்து இறங்கி சிறிது நேரம் கழித்து மேடையேறி பேசினார்.

கட்டுக்கடங்காத கூட்டத்தை குறைவான போலீசாரால் கட்டுபடுத்த முடியாததால் தடியடி நடத்தியதால் அங்கு   சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்