தமிழக சட்டமன்ற உறுப்பினராக கருணாநிதி இன்று பதவியேற்பு

திங்கட்கிழமை, 30 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே. - 30  - திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான கருணாநிதி புதிய சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்க இருக்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 13 -ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் 21 -ம் தேதி பதவி ஏற்றார் கள். அன்றைய தினம் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி டெல்லியில் இருந்தார்.
ஆகவே அவர் பதவி ஏற்கவில்லை. மேலும் , முன்னாள் அமைச்சர் துரை முருகனும் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள்  இருவரும் எம்.எல். ஏ.க்களாக இன்று பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
சபாநாயகர் ஜெயக் குமார் அறையில் இதற்கான நிகழ்ச்சி நடக்கின்ற து. தி.மு.க. தலைவரான கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டது நினைவு கூறத்தக்கது.
இவர்களைத் தவிர, அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிவபதி மற்றும் மனோகரன் ஆகியோரும் பதவி ஏற்காமல் இருந்தார்கள். இவர்கள் நேற்று முன் தினம் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: