முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஷ்கர்-இ-தொய்பாவால் இந்தியாவுக்கு ஆபத்து: அமெரிக்கா

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன் 4 - அல்கொய்தா அமைப்பைப் போல பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது தீவிரவாதிகள் மூலம் பயங்கர தாக்குதலை நடத்தியது. இதுபோன்ற தாக்குதல்களை இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து நடத்த அந்த இயக்கம் திட்டமிட்டு வருகிறது. அண்மையில் சிகாகோ நீதிமன்றத்தில் ஆஜரான பாகிஸ்தான் அமெரிக்க தீவிரவாதி டேவிட் ஹெட்லி அளித்த சாட்சியத்தில் இந்தியாவுக்கு எதிராக லஷ்கர் இ தொய்பா மேற்கொண்ட தாக்குதல் சதித்திட்டங்கள் குறித்து கூறியிருந்தான். இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பாவால் இந்தியாவுக்கு மாபெரும் அச்சுறுத்தல் உள்ளது என்று அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேனட் நெப்போலிடனோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், லஷ்கர் இ தொய்பா ஒரு பயங்கரமான தீவிரவாத இயக்கம். இந்த இயக்கம் அமெரிக்காவு அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு இந்த இயக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்துவருகிறது. அல்கொய்தாவைப் போல பலமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்றார். அமெரிக்காவில் 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக அல் கொய்தா இயக்கத்தை குறிவைத்துத்தான் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வந்தது. அந்த இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மாதம் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டான் என்றும் அவர் கூறினார். அல்கொய்தா தீவிரவாதிகளைப்போல லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என்றும் அவர் மேலும் கூறினார். அமைச்சர் ஜேனட் நெப்போலிடனோ சமீபத்தில் இந்தியாவில் ஒரு வார காலம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பல்வேறு முக்கிய தலைவர்களை சந்தித்து உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony