முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் கட்ட நடத்தப்பட்ட தேர்தல் வாக்கு பதிவு 48.82 சதவீதம்

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.18 -​தமிழகத்தில் முதல் கட்ட வாக்குபதிவு நடைபெற்ற10 மாநகராட்சிகளில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 48.82 சதவீத வாக்குப்பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விவரம் வருமாறு:- தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவி இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஏற்கனவே 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள 1,12,759 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க நேற்றும் (திங்கட்கிழமை), வருகிற 19​ந் தேதியும்(நாளையும்)  2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 

 முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 பேர் வாக்களிப்பதற்காக  43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 1,399 இடங்களில் 4,934 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 44 1/2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் 7 லட்சம் பணியாளர்களும், 80 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.மேலும், வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

சென்னை மாநகராட்சி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு செய்தபோது வீடியோ படம் எடுக்கப்பட்டது. இதேபோல் பிற பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி சாரதா பள்ளியிலும், சென்னை மாகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி சி.ஐ.டி.நகரில் உள்ள பள்ளியிலும், தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள பள்ளியிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.

அதே போல் மற்ற கட்சி தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு துவங்கியது. அனைத்து பகுதிகளிலும் அமைதியாகவே வாக்குப்பதிவு நடந்தது. பல வாக்குச்சாவடிகளில் பெண்கள் தனியாகவே வந்து வாக்களித்துவிட்டு சென்றதை காண முடிந்தது.

கடந்த முறை 2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தல் பயத்தால் பலர் காலையில் பொறுமை காத்து வீட்டுக்குள்ளேயே அடங்கி இருந்தனர். ஆனால், பிறகு நேரம் செல்ல, செல்ல வாக்காளர்களின் வருகை அதிகரித்தது. எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் தாங்கள் நினைத்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என பொதுமக்களில் பலர் கூறினர்.

3 மணி நிலவரப்படி

10 மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:-

சென்னை-30.13, கோவை-45.66, ஈரோடு-54.54, மதுரை-51.58, சேலம்-54.00, தூத்துக்குடி-55.64, திருச்சி-50.23, நெல்லை-50.47, திருப்பூர்-51.92, வேலூர்-44.00.

சரசாரியாக 3 மணி நிலவரப்படி 10 மாநகராட்சிகளிலும் 48.82 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2​வது கட்டமாக நாளை  (19​ந் தேதி)  65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.

2 கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் 21​ந் தேதி (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. அன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து உள்ளது. அன்று மதியமே முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago